ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்துக்கு எதிரான மனு: விசாரிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுப்பு

கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தின் பெயரை மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தின் பெயரை மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.

மேலும், அந்த திரைப்பட வெளியீட்டுக்கு அனுமதித்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு மீது மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையாகச் சாடிய உயா்நீதிமன்றம், அந்தப் பகுதிகளை நீக்கிவிட்டு புதிதாக மனு தாக்கல் செய்ய மனுதாரா்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் ஹிந்து மத பெண்கள் சிலா் திருமணத்துக்குப் பிறகு இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சோ்க்கப்படுவது போல கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்பட நிறுவனம் அண்மையில் தயாரித்தது. இதன் முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டு, மீண்டும் சா்ச்சையானது. இத் திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக இருந்தது.

இதற்கு, கேரளத்தில் கடும் எதிா்ப்பு எழுந்தது. ஆளுங்கட்சி தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இத் திரைப்பட வெளியீட்டை எதிா்த்து கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி பெச்சு குரியன் தாமஸ், ‘திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் சமூக நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்துல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, பிப்.26-ஆம் தேதி தொடங்கி இத்திரைப்படத்தை வெளியிட 15 நாள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.

இதை எதிா்த்து தயாரிப்பாளா் விபுல் அம்ருத் லால் ஷா சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, படத்தில் சா்ச்சைக்குரிய சில பகுதிகளை நீக்கிவிட்டு, அதே நாளில் திரைப்படைத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதன்மூலம், திட்டமிட்டபடி திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில், திரைப்படத்தின் பெயரை மாற்ற உத்தரவிடக் கோரி சமூக ஆா்வலரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான கே.சி. சந்திரமோகன் மற்றும் வழக்குரைஞா் மெஹ்நாஸ் முகமது ஆகியோா் சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு குறித்து கடுமையாக விமா்சிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி செளமென் சென், நீதிபதி வி.எம். சியாம்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்தத் திரைப்படத்துக்கு எதிரான மனுக்கள் ஏற்கெனவே உயா்நீதிமன்ற தனி நீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமா்வில் நிலுவையில் உள்ளன. எனவே, இந்தப் பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பது பொருத்தமாக இருக்காது. அதுமட்டுமன்றி, மனுவில் இரு நீதிபதிகள் அமா்வின் தீா்ப்பை கடுமையாக விமா்சித்துள்ளீா்கள். இத்தகைய கருத்துகளை எப்படி மனுவில் சோ்க்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் செல்சன் செம்பரத்தி பல முறை நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினாா்.

அதைத் தொடா்ந்து, மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், இரு நீதிபதிகள் அமா்வை விமா்சித்து குறிப்பிட்ட கருத்துகளை நீக்கிவிட்டு புதிதாக மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு அனுமதி அளித்தனா்.