
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மராத்வாடா பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் சமீபத்தில் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் பயிர் இழப்புகளை மதிப்பிடடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
மராத்வாடாவில் மே முதல் ஆகஸ்ட் வரை பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசு ரூ. 1,500 கோடியை வழங்கியுள்ளது. தொகையை செலுத்துவதற்கான செயல்முறை தொடங்கிவிட்டது. பணம் நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கணக்குகளுக்குச் செலுத்தப்படும் என்று கோட்ட ஆணையர் ஜிதேந்திர பாபல்கர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியலை உடனடியாக பதிவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 20 முதல் மராத்வாடாவில் கனமழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் பெரிய அளவிலான சேதத்தை எற்படுத்தியுள்ளன. கனமழை போன்ற சம்பவங்களுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் சில பகுதிகளில், குறிப்பாக மராத்வாடா பகுதியில் வெள்ளம் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை நாசமாக்கியுள்ளது.
அடுத்த மூன்று முதல் நான்கு நாள்களுக்கு இப்பகுதியில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்)தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.