
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டன.
மணிப்பூரின், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஷிஜா பொது உயிரியல் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 330 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அழித்ததாக சனிக்கிழமை காவல் துறை தெரிவித்துள்ளது.
அழிக்கப்பட்ட போதைப்பொருள்களில் ஹெராயின் (6 கிலோ), பிரவுன் சுகர் (87 கிலோ) மற்றும் கஞ்சா (182 கிலோ) ஆகியவை அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மணிப்பூர் காவல் துறை தலைவர் ராஜீவ் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடுமையான மேற்பார்வையின் கீழ் போதைப் பொருள்கள் அழிப்பு செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மீண்டும் பயன்பாட்டுக்குச் செல்வதைத் தடுக்க, 6 மாதங்களுக்கு ஒருமுறை வழக்கமான இடைவெளியில் போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பிரதமரின் முயற்சி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில், நாங்கள் எப்போதும் போதைப்பொருள்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். நாங்கள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் தொடர்பில் உள்ளோம்.
நாடு முழுவதும் உள்ள நெட்வொர்க்குகளுடன் தொடர்புடைய முக்கிய வழக்குகள் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டு, சரியான முறையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.