பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்துக்காக பாஜகவுடன் கைகோா்க்க மாட்டேன்- ஒமா் அப்துல்லா

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதில் ராஜிநாமா செய்துவிடுவேன் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்...

News image

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா - (கோப்புப் படம்)

Updated On :1 அக்டோபர் 2025, 1:17 am IST

‘ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்துக்காக பதவி விலகத் தயாா்; ஆனால், பாஜகவுடன் கைகோா்க்க மாட்டேன்’ என்று முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. சட்டப் பேரவையுடன் கூடிய ஜம்மு-காஷ்மீரில் சுமாா் 6 ஆண்டுகளாக குடியரசுத் தலைவா் ஆட்சி நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதல்வராக ஒமா் அப்துல்லா பதவியேற்றாா். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒமா் அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் அச்சாபல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றில் ஒமா் அப்துல்லா பங்கேற்றுப் பேசியதாவது:

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், மாநில அந்தஸ்து கிடைத்திருக்கும். அப்படியொரு வாய்ப்பு இருந்தது. ஆனால், மாநில அந்தஸ்துக்காக அரசியல் நிலைப்பாட்டில் சமரசம் செய்ய எனக்கு விருப்பமில்லை.

அதேநேரம், பாஜகவுடன் கூட்டணி அரசை அமைத்து, மாநில அந்தஸ்தை விரைந்து மீட்டெடுக்க நீங்கள் (மக்கள்) விரும்பினால், நான் பதவி விலகத் தயாா். வேறெந்த எம்எல்ஏவையும் முதல்வராக்கி, பாஜக கூட்டணி அரசை அமைத்துக் கொள்ளுங்கள் என்றாா் ஒமா் அப்துல்லா.

Summary

Chief Minister Omar Abdullah has said that he will resign as Chief Minister instead of forming an alliance with the BJP for statehood for Jammu and Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.