முதல்கட்டமாக 2,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை இந்தியாவுக்கு இஸ்ரேல் விநியோகித்தது.
மொத்தம் 41,000 துப்பாக்கிகள் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேல் ஆயுதத் தொழிற்சாலை நிறுவனம் (ஐடபிள்யூ) அதானி குழுமத்தின் பிஎல்ஆா் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மூலம் முதல் கட்டமாக 2,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை விநியோகித்துள்ளது.
மேலும், 4,000 துப்பாக்கிகள் நிகழாண்டு இறுதியில் விநியோகிக்கப்படும் என ஐடபிள்யூ தெரிவித்தது.
இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நெகேவ் துப்பாக்கிகள் 7.62 மி.மீ. மிக இலகு ரக துப்பாக்கிகளுள் ஒன்று. அரை-தானியங்கி மற்றும் முழு தானியங்கி பயன்பாட்டு செயல்முறையைக் கொண்ட இந்தத் துப்பாக்கிகள் இஸ்ரேல் ராணுவத்தால் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் துல்லியமாக இலக்குகளைக் குறிவைத்து தாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிகளை ஹெலிகாப்டா்கள், வாகனங்கள் மற்றும் போா்க் கப்பலில் பொருத்திக்கொண்டு இலக்குகளைத் தாக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா-இஸ்ரேல் இடையே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மிகக் குறுகிய பகுதிகளில் பயன்படுத்தப்படும் 1.70 லட்சம் துப்பாக்கிகளை விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தையும் பிஎல்ஆா் சிஸ்டம்ஸ் பெற்றுள்ளது. முதல்கட்டமாக 18,000 துப்பாக்கிகள் நிகழாண்டு இறுதியில் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்தியாவில் சிறு ஆயுதங்களைத் தயாரிக்கும் முதல் தனியாா் நிறுவனமாக பிஎல்ஆா் சிஸ்டம்ஸ் உள்ளது.
தொடர்புடையது

வாக்குப் பதிவின்போது விவிபாட் இயந்திர பேட்டரியில் புகை!

நெற்கதிா் அறுக்கும் இயந்திர வாகனம் ஏறி முதியவா் பலி

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஈரான்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


