மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு! முதல் பட்டியலில் 3 பேர்!

பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 12:23 pm

2026 பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில், முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சுமூகமாக நடைபெற்று, பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாக 5, ஐஜேவுக்கு 2, தமமுக 1, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு, சேலம் மேற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, அம்பத்தூர், விருத்தாச்சலம் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப். 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றில்  3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி கீழ்வேளூர் தொகுதியில் ச. வடிவேல் இராவணன், அம்பத்தூர் தொகுதியில் கே.என். சேகர், செஞ்சி தொகுதியில் அ. கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Out of the 18 constituencies the PMK is contesting in the assembly elections, party leader Anbumani has announced candidates for three of them in the first phase.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.