எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பிரேமலதாவுக்கு 10, திருமாவளவனுக்கு 8 சீட்தான் திமுகவின் சமூகநீதி: அன்புமணி கடும் தாக்கு

அடித்தட்டு மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 12:47 pm IST

அடித்தட்டு மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அன்புமணி பேசுகையில், நீங்களெல்லாம் (திமுக கூட்டணி) சமூக நீதி குறித்து பேசுகிறீர்கள். கூட்டணியில் 5 வருடங்களாக திருமாவளவன் அவதியுற்று வருகிறார். அவரால் வாய்கூட பேசமுடியவில்லை. அவரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

விஜயகாந்த் எதற்காக கட்சி தொடங்கினார்? இந்த ஊழல் திமுகவை ஒழிக்க வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே கட்சி தொடங்கினார். ஆனால், இன்று அங்கேயே பிரேமலதா சேர்ந்து விட்டார்.

இதனை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்கவும் செய்யாது; சும்மாவும் இருக்காது. இது எவ்வளவு பெரிய துரோகம்.

அவர்கள் அங்கு போனவுடன் 10 சீட் கொடுத்து விட்டனர். ஆனால், அவ்வளவு உழைத்து, 10 வருடங்கள் உடனிருந்த திருமாவளவனுக்க்கு 8 சீட் மட்டும்தான். இதுதான் திமுக.

உழைக்கின்ற வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்களுக்கு திமுக எதுவும் கொடுக்க மாட்டார்கள். அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே திமுக பார்க்கிறது.

அவர்களின் வாக்கு மட்டும் வேண்டும். ஆனால், அவர்கள் முன்னேறக் கூடாது, படிக்கக் கூடாது, அப்படியே அடிமையாகவே இருக்க வேண்டும், போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும், படிப்பறிவு இருக்கக் கூடாது, கூலியாக இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கமே என்று தெரிவித்தார்.

Summary

PMK leader Anbumani alleges that the DMK uses the marginalized sections of society merely as a vote bank.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.