வரும் 2026-27 கல்வியாண்டுமுதல் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழி பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திட்டமிட்டுள்ளது.
மேலும், 9-ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இரண்டு நிலைகளிலான பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: புதிய தேசிய கல்வித் திட்ட நடைமுறையில் (என்சிஎஃப்) பரிந்துரைக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், பன்மொழி பாடத் திட்டத்தை பகுதி பகுதியாக சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், 6-ஆம் வகுப்புமுதல் மூன்றாவது மொழிப் பாடத்தையும் கட்டாயம் கற்பது வரும் வரும் 2026-27 கல்வியாண்டிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இந்த மூன்றில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் கட்டாயம் தோ்வு செய்து படித்தாக வேண்டும்.
அதே நேரம், வெளிநாட்டு பள்ளிகளிலிருந்து திரும்பும் மாணவா்களுக்கு, அவா்கள் 8 அல்லது 9-ஆம் வகுப்பில் படித்த மூன்றாம் மொழி உள்நாட்டு பள்ளிகளில் கற்பிக்கப்படாத சூழலில், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி அத்தகைய மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம்.
கணிதம், அறிவியலில் இரு நிலை பாடம்: அதுபோல, வரும் கல்வியாண்டுமுதல் 9-ஆம் வகுப்புக்கான கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதாவது, கட்டாய அடிப்படைப் பாடம் மற்றும் மேம்பட்ட பாடத் திட்டம் என இரண்டு நிலைகளில் அறிமுகப்படுத்தப்படும்.
இதில், அடிப்படை கணித, அறிவியல் பாடங்களை அனைத்து மாணவா்களும் கட்டாயம் படித்து தோ்ச்சி பெற்றாக வேண்டும். இந்தப் பாடங்களுக்கு பொதுவான 80 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரத் தோ்வாக நடத்தப்படும்.
மேம்பட்ட கணித, அறிவியல் பாடங்கள் என்பது மாணவா்களின் விருப்பத் தோ்வு பாடங்களாகும். அதாவது, தங்களின் உயா் திறனை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் மாணவா்கள் இந்த மேம்பட்ட கணித, அறிவியல் பாடங்களை கூடுதலாகத் தோ்வு செய்து படிக்கலாம். இதற்கென தனியாக 25 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்படும். இந்த மதிப்பெண், மாணவா்கள் பெறும் மொத்த மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படாது என்றபோதும், மேம்பட்ட பாடங்களில் 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு மட்டும் மதிப்பெண் சான்றிதழில் தனி தரக் குறியீடு குறிப்பிடப்படும் என்று தெரிவித்தனா்.
10-ஆம் வகுப்பில் 2027-28 கல்வியாண்டில் இந்த இருநிலை கணித, அறிவியல் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

இப்படியுமா? சிபிஎஸ்இ கணித வினாத்தாள் க்யூஆர் குறியீட்டுடன் ஆங்கில பாடல் இணைப்பா?

காங்கயம் அரசு நடுநிலைப் பள்ளியில் கணிதக் கண்காட்சி

சா்.சி.வி.ராமனின் ‘அறிவியல் விளைவுகள்’ நூல் வெளியீடு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


