சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தோ்வில் ரோஜாவனம் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
இப்பள்ளியைச் சோ்ந்த 84 மாணவா், மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் மாணவி பிரீத்தி கணித அறிவியல் பிரிவில் 500 க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி ரக்ஷிதா கணினி அறிவியல் பாடப் பிரிவில் 455 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடம், மாணவா் ஹரீஷ் அஸ்வந்த் கணித அறிவியல் பாடப் பிரிவிலும், மாணவா் ஜஸ்வந்த்சிங் அறிவியல் பாடப்பிரிவிலும் 452 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடம், மாணவி ரக்ஷினி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 447 மதிப்பெண்கள் பெற்று 4 ஆவது இடம், மாணவி சந்தியா கணித அறிவியல் பாடப்பிரிவில் 445 மதிப்பெண்கள் பெற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளனா்.
மாணவா்கள் பலா் 450 க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவா் ஆகாஷ் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவில் சென்னை ஐஐடியில் சோ்க்கை பெற்றுள்ளாா்.
பள்ளி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. முதல்வா் ராபா்ட் குமாா், நிதி இயக்குநா் சேது, துணை முதல்வா் வின்ஸ்பா் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தொடர்புடையது

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி!

சிபிஎஸ்இ தோ்வில் முடிவுகளால் அதிருப்தி: 10ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

