மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள்போல் நடித்து நபர் ஒருவரிடம் ரூ. 7.11 லட்சத்தை மோசடி செய்ததாகக் காவல்துறை தெரிவித்தனர்.
காவல்துறையின் தகவலின்படி,
தாணேவில், டோம்விவிலியைச் சேரந்த 42 வயதுடைய நபருக்கு மார்ச் முதல் வாரத்தில், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்தவர் என கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அவரிடம் அந்த நபர், பெண்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், அதுதொடர்பாக காட்கோபர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதாகவும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, அவரது வங்கிப் பரிவர்த்தனைகள் மோசடி நடவடிக்கைகளைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் விசாரிக்கும் என போலி நபர்கள் கூறியுள்ளனர். தாங்கள் சொல்வது உண்மை என்று நம்பவைக்க உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்தவை எனப் போலி ஆவணங்களையும் பாதிக்கப்பட்ட நபருக்கு அனுப்பினர்.
இந்த வழக்கை முடித்துவைப்பதற்காக, பாதிக்கப்பட்டவரிடம் தவணை முறையில் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர், அந்தத் தொகை தவணை முறையில் திரும்ப அளிக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அவர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இணையவழிப் பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 71.1 லட்சத்தை அந்த மோசடியாளார்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த தகவலைப் பாதிக்கப்பட்ட நபர் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களைத் தனது மனைவியிடம் பகிர்ந்துகொண்ட பின்னரே, அவரது மனைவி அந்த மோசடியாவார்களிடம் கேள்விகள் எழுப்பியதுடன், அவர்கள் அனுப்பிய ஆவணங்களையும் சரிபார்த்தார்.
ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்ததும், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அந்தக் குடும்பத்தினர் உணர்ந்தனர்.
இதையடுத்து, திலக் நகர் காவல் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
Summary
Cyber fraudsters posing as CBI officers allegedly duped a 42-year-old man from Maharashtra's Thane district of Rs 71.1 lakh after threatening to implicate him in a false case of harassment, police said on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிலையன்ஸ் டெலிகாம் முன்னாள் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு! இத்தனை கோடிகள் மோசடியா?

டிஜிட்டல் கைது மோசடி: ரூ.15 கோடிக்கு மேல் இழந்த கர்நாடக தொழிலதிபர்!

பவன் கல்யாண் கட்சி எம்எல்ஏவிடம் ரூ. 12 லட்சம் சைபர் மோசடி: கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியால் விபரீதம்!

தாணே: நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மருத்துவர் ஓட்டிச்சென்ற கார் மோதல்; 6 பேர் காயம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


