கர்நாடகத்தில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து 81 வயது தொழிலதிபரிடம் இருந்து ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அந்த தொழிலதிபருக்கு கடந்த ஆறு வாரங்களாக விடியோ அழைப்புகள் உட்பட பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்டவர் ரூ.25 லட்சத்தை சட்டவிரோதமாகப் பணமாக்கியதற்காக ரூ.5 லட்சம் கமிஷன் பெற்றதாகவும், சட்டவிரோத நிதி நடவடிக்கைகளுக்காக அவர் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர்.
பணமோசடி வழக்கில் அவரைக் கைது செய்யப்போவதாக மிரட்டிய அந்த குமபல், தொழிலதிபரை வற்புறுத்தி அவரது வங்கி கணக்கு விவரங்களைப் பெற்றுள்ளனர். தொடர்ந்து, பணத்தைப் பாதுகாப்பான அல்லது அரசு கணக்கிற்கு மாற்றச் சொல்லியுள்ளனர். விசாரணை முடிந்ததும பணம் திருப்பித் தரப்படும் என்று அவருக்கு அந்த கும்பல் உறுதியளித்துள்ளனர்.
ஆனால், அதன் பிறகு அந்த கும்பலிடமிருந்து எந்தத் தகவலும் வராததால் அவர்கள் பயன்படுத்திய எண்களைத் தொழிலதிபர் தொடர்புகொண்டுள்ளார். அதனையும் தொடர்புகொள்ள முடியாததால் பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் கடந்த வாரம் போலீஸில் புகார் அளித்தார்.
சைபர், பொருளாதார மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், பணம் மாற்றப்பட்ட கணக்கைக் கண்டறிந்தனர். எனினும், அதிலிருந்து ரூ.90 லட்சத்தை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய பெலகாவி போலீஸ் ஆணையர் ஒரு தனிப்படையை அமைத்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
Summary
A 81-year-old businessman here allegedly lost over Rs 15 crore in a "digital arrest scam" after fraudsters posing as CBI officials accused him of involvement in a financial crime, police said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ. 71.1 லட்சம் மோசடி!

ரூ.2,929 கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் 2-ஆவது நாளாக சிபிஐ விசாரணை
பண மோசடி வழக்கு: அனில் அம்பானியிடம் சிபிஐ விசாரணை

வாராக்கடனை மீட்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


