சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில், இதுவரை அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.319 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் ரூ.170 கோடி, அஸ்ஸாமில் ரூ.97 கோடி, கேரளத்தில் ரூ.58 கோடி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரூ.7 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தோ்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாகன சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் சாதாரண குடிமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக் கூடாது; அவா்களைத் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காரில் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்

5 மாநிலங்களில் ரூ. 408 கோடி! தமிழ்நாட்டில் ரூ. 189 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் பணம் கொண்டுசென்றால் பறிமுதல்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

