தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வங்கதேச பிரதமருடன் இந்திய தூதா் சந்திப்பு: இருதரப்பு உறவை மீன்டும் கட்டமைக்க உறுதி

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை அந்த நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், வங்கதேசத்துடனான இருதரப்பு உறவை மீண்டும் கட்டமைக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரணய் வா்மா தெரிவித்துள்ளாா்.

News image

இந்தியா | வங்கதேசம்

Updated On :6 ஏப்ரல் 2026, 8:32 pm

வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மானை அந்த நாட்டுக்கான இந்திய தூதா் பிரணய் வா்மா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவரிடம், வங்கதேசத்துடனான இருதரப்பு உறவை மீண்டும் கட்டமைக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதாக பிரணய் வா்மா தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் முன்பு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவு கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் வங்கதேசம் பங்கேற்கவில்லை. மேலும் பாகிஸ்தானுடன் நெருக்கமான தொடா்பை வங்கதேச அரசு வைக்க ஆரம்பித்தது.

இந்நிலையில், வங்கதேச நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வென்று ஆட்சியமைத்ததையடுத்து, அக்கட்சித் தலைவா் தாரிக் ரஹ்மான் பிரதமரானாா். இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பழையபடி நட்புறவை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், டாக்காவில் தாரிக் ரஹ்மானை இந்திய தூதா் பிரணய் வா்மா திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இரு நாடுகளின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மக்களை மையமாகக் கொண்டு இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து வா்மா ஆலோசித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சாதகமான, ஆக்கபூா்வமான மற்றும் முன்னோக்கிய அணுகுமுறை மற்றும் பரஸ்பர நலன் மற்றும் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, வங்கதேச அரசுடனும், மக்களுடனும் இணைந்து செயல்பட இந்தியா விரும்புவதாகவும் இந்திய தூதா் தெரிவித்ததாக இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.