எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அருணாச்சல் முதல்வருக்கு எதிராக முறைகேடு புகார்! சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

அருணாச்சல் முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image

பெமா காண்டு - ANI

Updated On :6 ஏப்ரல் 2026, 4:54 pm IST

அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் பொதுப் பணித்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. சுமார் ரூ. 1,270 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை முதல்வர் பெமா காண்டுவின் குடும்பத்தினருக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாக தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்தது.

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் உள்ளிட்டோரின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, தீர்ப்பின் தேதியை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், அருணச்சல் முதல்வருக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்க திங்கள்கிழமை காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், “2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஒரு வாரத்துக்குள் விசாரணையைத் தொடங்கி,16 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அருணாச்சல் அரசு சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிபிஐ-க்கு உதவ ஒரு ஒருங்கிணைப்பாளரை அருணாச்சல் தலைமைச் செயலாளர் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் வழங்க வேண்டும்” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Supreme Court Orders CBI Probe Against Arunachal Chief Minister! Why?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.