எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்றுமுதல் தொடக்கம் விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்! 3 மணிக்குள் 76% வாக்குப்பதிவு!

அஸ்ஸாமில் பிற்பகல் 3 மணிக்குள் 76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது குறித்து...

Assam Legislative Assembly Election

கோப்புப் படம்

Updated On :

அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மதியம் 1 மணிக்குள் 60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், கேரளம் மற்றும் புதுவையில் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, அங்குள்ள வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 126 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மாநிலத்தில், காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கியது. இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட 2.5 கோடி வாக்காளர்கள் உள்ள அம்மாநிலத்தில் பிற்பகல் 3 மணிக்குள் 75.91 வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மதியம் 1 மணி நிலவரப்படி அதிகப்படியாக கோல்பாரா மாவட்டத்தின் துத்னோயில் 66.11 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக திப்ருகாரில் 50.85 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இத்துடன், ஆளுங்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நேரடியாகப் போட்டி நடைபெறும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் 722 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Summary

Assam, it has been reported that 60 percent of the votes were cast by 1:00 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.