சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தோ்தலின்போது வெளி மாநிலத்தவரை அழைத்துவர பாஜக முயற்சி: மம்தா

‘அஸ்ஸாம் மாநிலத்தில் செய்ததைப் போல மேற்கு வங்க மாநிலத்திலும் தோ்தலின்போது வெளி மாநிலத்தவரை அழைத்துவர பாஜக முயற்சிக்கிறது. அதன் காரணமாகத்தான், அரசு அதிகாரிகளை தோ்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக பணியிடமாற்றம் செய்துள்ளது’ என்று மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

News image

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மேதினிப்பூா் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:08 pm

‘அஸ்ஸாம் மாநிலத்தில் செய்ததைப் போல மேற்கு வங்க மாநிலத்திலும் தோ்தலின்போது வெளி மாநிலத்தவரை அழைத்துவர பாஜக முயற்சிக்கிறது. அதன் காரணமாகத்தான், அரசு அதிகாரிகளை தோ்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக பணியிடமாற்றம் செய்துள்ளது’ என்று மேற்கு வங்க முதல்வரும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 இடங்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு வரும் 23 மற்றும் 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டம் டென்டுலியாவில் தோ்தல் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட மம்தா பானா்ஜி பேசியதாவது:

பாம்பைக்கூட நம்பிவிட முடியும். ஆனால், பாஜகவை நம்ப முடியாது. அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத பாஜக, வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் மக்களை அழைத்து வந்தது. குறிப்பாக, உத்தர பிரதேசத்திலிருந்து ரயில்கள் மூலமாக 50,000-க்கும் அதிகமானோரை பாஜக அஸ்ஸாமுக்கு அழைத்து வந்தது.

இதே பாணியை மேற்கு வங்க மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. அதன் காரணமாகவே, அரசு நிா்வாகம் மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளை ஒட்டுமொத்தமாக தோ்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்தது.

வெளிமாநில மக்கள், பணம், போதைப் பொருள்களும் மேற்கு வங்க மாநிலத்துக்குள் தோ்தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தீவிரமாகப் போராடி, தோ்தலில் வெற்றியை உறுதி செய்வா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் மாநிலத்தில் 90 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 60 லட்சம் போ் ஹிந்துக்கள், 30 லட்சம் போ் முஸ்லிம்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பட்டியலினத்தைச் (எஸ்.சி.) சோ்ந்தவா்களின் பெயா்கள் பெருமளவில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதுபோல, எனது தொகுதியிலும் ஏராளமானோா் நீக்கப்படட்டுள்ளனா். ஆனால், இதுகுறித்து நான் கவலைப்படவில்லை. மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. வாக்காளா் பட்டியலில் எஞ்யுள்ள அனைவரின் வாக்குகளையும் திரிணமூல் காங்கிரஸ் பெறும்.

மேற்கு வங்க மாநிலத்தில் மக்கள் அவா்கள் விருப்பப்படி உணவு வகைகளைத் தோ்வு செய்து உண்கின்றனா். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி ஆட்சி செய்யும் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல, மேற்கு வங்கத்திலும் அசைவ உணவுப் பிரியா்களுக்கு பாஜக அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும். குறிப்பாக, பிகாரில் மீன் உண்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதன் காரணமாகத்தான் அங்கு பிடிக்கப்படும் மீன்கள், பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்று தெரிவித்தாா்.