தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகல் காணொலி வாயிலாக மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,
அரவிந்த் கேஜரிவால் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி நிலுவையில் உள்ள தனது புதிய பிரமாணப் பத்திரத்தைப் பதிவு செய்ய வலியுறுத்துவார்.
அவர் ஆஜராகும் காணொலிகள் உடனடியாக அகற்றப்படுகின்றன. ஆனால், தீவிர முரண்பாட்டை எழுப்பும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டால், அவர் நீதிமன்றத்திற்கு வர வேண்டும்.
தனது பிரமாணப் பத்திரத்தில் அரசு வழக்குகள் சட்ட அதிகாரிகள் மற்றும் குழு வழக்குரைஞர்களுக்கு ஒதுக்கப்படும் நிறுவன ரீதியான செயல்முறையில் கேஜரிவால் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
வழக்கு என்ன?
மதுபான கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விசாரணை நீதிமன்றம் கடந்த பிப்.27-ஆம் தேதி விடுவித்தது.
இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா முன்பாக கடந்த மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மதுபான கொள்கை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளுக்கு நீதிபதி சா்மா இடைக்கால தடை விதித்தாா்.
மேலும், சிபிஐ மனு மீது பதிலளிக்க கேஜரிவால், சிசோடியா உள்பட 23 பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்க நீதிபதி சா்மா உத்தரவிட்டாா்.
இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து நீதிபதி சா்மாவை விடுவிக்க வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயவுக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்தாா்.
நீதிபதி சா்மா முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை பாரபட்சமற்தாகவும் நடுநிலையாகவும் இருக்காது என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி நிராகரித்த நிலையில், கேஜரிவால் உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.
வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆம் ஆத்மி தலைவா் தாக்கல் செய்த மனுவை ஏப். 16ல் விசாரணை நடைபெறும் என்பதால் இன்று பிற்பகல் 2.30-க்கு காணொலி வாயிலாக கேஜரிவால் மீண்டும் தில்லி நீதிமன்றத்தில் ஆஜராவார் என அதிஷி தெரிவித்துள்ளார்.
Summary
Former Delhi Chief Minister and AAP national convenor Arvind Kejriwal is expected to appear before Justice Swarnakanta Sharma in court at 2:30 pm via video conferencing today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால்,சிசோடியாவுக்கு ஆஜராக மூத்த வழக்குரைஞா்கள் நியமிக்கப்படுவா்: நீதிபதி எஸ்.கே.சா்மா

மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி விலகக் கோரிய மனு: கேஜரிவால் பிரமாணப்பத்திரம் தாக்கல்

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


