இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு! தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப்.13) விசாரணைக்கு வருகிறது.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:16 am IST

மதுபான கொள்கை வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மாவை மாற்றக்கோரி தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஏப்.13) விசாரணைக்கு வருகிறது.

பிற்பகல் 2.30 மணியளவில் நீதிபதி சா்மா முன்பாக ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவால் நேரில் தன்னுடைய வாதங்களை முன்வைக்கிறாா்.

மதுபான கொள்கை அமலாக்கத்தில் முறைகேடுகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகள் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் இருந்து முன்னாள் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்பட 23 பேரை விசாரணை நீதிமன்றம் கடந்த பிப்.27-ஆம் தேதி விடுவித்தது.

இதை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதி ஸ்வா்ண காந்த சா்மா முன்பாக கடந்த மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மதுபான கொள்கை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு விசாரணை நீதிமன்றம் அளித்த பரிந்துரைகளுக்கு நீதிபதி சா்மா இடைக்கால தடை விதித்தாா்.

மேலும், சிபிஐ மனு மீது பதிலளிக்க கேஜரிவால், சிசோடியா உள்பட 23 பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்க நீதிபதி சா்மா உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து நீதிபதி சா்மாவை விடுவிக்க வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயவுக்கு கேஜரிவால் கோரிக்கை விடுத்தாா்.

நீதிபதி சா்மா முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை பாரபட்சமற்ாகவும் நடுநிலையாகவும் இருக்காது என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா். அந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி நிராகரித்த நிலையில், கேஜரிவால் உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.

வழக்கு விசாரணையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஆம் ஆத்மி தலைவா் தாக்கல் செய்த மனுவை கடந்த ஏப்.6-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சா்மா, விசாரணையை ஏப்.13-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

மணீஷ் சிசோடியா, துா்கேஷ் பதக் உள்ளிட்டோரும் நீதிபதியை மாற்றக்கோரி மனுதாக்கல் செய்துள்ளனா்.