ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மே.வங்கத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் 87 ஆகக் குறைப்பு!

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் 87 ஆகக் குறைக்கப்பட்டது குறித்து...

News image

மேற்கு வங்க தேர்தல்... - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:49 pm IST

மேற்கு வங்கத்தில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 87 ஆகக் குறைக்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து, அங்கு தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை 87 ஆகக் குறைக்கப்படுவதாக, வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரேசத்தின் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் அதிகப்படியாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 12 வாக்கு எண்ணும் மையங்களும், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் 8 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மேற்கு வங்கத்தில் கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் 90 வாக்கு எண்ணும் மையங்களும், 2021 தேர்தலில் 108 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Election Commission has announced that the number of vote-counting centers for West Bengal is being reduced to 87.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.