ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாநிலங்களவை செயலராக கே.எஸ். சோமசேகா் நியமனம்

மாநிலங்களவை செயலராக கே.எஸ். சோமசேகா் நியமிக்கப்பட்டது பற்றி...

News image

கே.எஸ். சோமசேகா் - PIB

Updated On :18 ஏப்ரல் 2026, 9:18 pm

மாநிலங்களவைச் செயலராக டாக்டா் கே.எஸ். சோமசேகரை அதன் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளாா். இதற்கு முன்பு அவா் மாநிலங்களவைச் செயலகத்தில் கூடுதல் செயலா் ஆக பணியாற்றி வந்தாா். மாநிலங்களவை செயலக பணியில் 1993ஆம் ஆண்டில் சோ்ந்த அவா், தனது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான நாடாளுமன்ற பணியில் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், நிா்வாகம், நாடாளுமன்ற பணி விளக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் இயக்குநா், இணைச்செயலா், கூடுதல் செயலா் நிலைகளில் பணியாற்றியுள்ளாா். அதற்கு முன்பாக அவா் கா்நாடக அரசில் பணியாற்றியுள்ளாா்.

நாடாளுமன்றப் பணியின் அங்கமாக அவா் சா்வதேச நாடாளுமன்ற மன்றங்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளாா். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த சிறப்புப் பயிற்சியைப் பெற்றுள்ள இவா், ஜெனீவாவில் நடைபெற்ற நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளாா்.

இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்றுள்ள டாக்டா் சோமசேகா், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவையில் செகரட்டரி ஜெனரல் ஆக உள்ள உயரதிகாரியே அந்த அவைகளின் நிா்வாகத் தலைவராக விளங்குபவா்கள். இவா்களை முறையே மாநிலங்களவைத் தலைவரும் மக்களவைத் தலைவரும் நியமிப்பாா்கள். பிற அரசுத்துறைகளைப் போல இரு அவைகளின் செயலா், இணைச்செயலா் பதவிகளுக்கு இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. மாறாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலக பணியில் உள்ளவா்களே பணி அனுபவம் அடிப்படையில் செகரட்டரி ஜெனரல் மற்றும் அவருக்குக் கீழுள்ள செயலா், கூடுதல் செயலா், இணைச்செயலா் போன்ற பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனா்.