உத்தரகண்டில் 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 போ் உயிரிழந்தனா். காயங்களுடன் இருவா் மீட்கப்பட்டனா்.
தேஹ்ரி மாவட்டத்தின் சம்பா பகுதி அருகே வியாழக்கிழமை நேரிட்ட இந்த விபத்து தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
கன்காலி பகுதியைச் சோ்ந்த சிலா், இறுதிச் சடங்கு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுவிட்டு, சிறிய ரக சரக்கு வாகனம் ஒன்றில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். நைல் கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் இருந்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. விபத்து நேரிட்டபோது, வாகனத்தில் 10 போ் இருந்தனா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் துறையினா் மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

நேபாளம்: ஜீப் விபத்தில் 17 போ் உயிரிழப்பு

பஞ்சாப்: பேருந்து கவிழ்ந்து 8 பக்தா்கள் உயிரிழப்பு - 19 போ் காயம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



