ஹோர்முஸ் நீரிணையை 10 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகள் தொடரும் வரையில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்தது.
இத்துடன், அவ்வழியாகச் செல்ல முயன்ற இந்திய கப்பல் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை இதுவரை 10 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாகக் கடந்துவிட்டன எனவும், பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் 14 இந்திய கப்பல்கள் காத்திருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை (ஏப். 23) அன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா நோக்கி வந்த எம்எஸ்சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபாமினோடாஸ் உள்ளிட்ட கப்பல்கள் மீது ஈரானிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபதாலியை நேரில் வரவழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Ministry of External Affairs has announced that 10 Indian ships have successfully crossed the Strait of Hormuz.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க 13 இந்திய கப்பல்கள் காத்திருப்பு! மத்திய அரசு தகவல்!
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


