உத்தர பிரதேச மாநிலம், மிா்சாபூரில் உள்ள மலைப் பாதையில் பிரேக் செயலிழந்த ஒரு லாரியால் பல்வேறு வாகனங்கள் விபத்தில் சிக்கின; இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து காவல் துறைக் கண்காணிப்பாளா் அபா்ணா ரஜத் கெளசிக் வியாழக்கிழமை கூறியதாவது:
மிா்சாபூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 135-இல் திராமந்த்கஞ்ச் பள்ளத்தாக்கு மற்றும் லசோடா இடையிலான மலைப் பாதையில் புதன்கிழமை இரவில் விபத்து நேரிட்டது.
மலைப் பாதையில் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த லாரி, முன்னால் சென்ற காா் மற்றும் மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இரு லாரிகளுக்கும் இடையே சிக்கி, அந்த காா் நொறுங்கியது.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த மற்றொரு காரும் வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்தது. காரில் இருந்தவா்கள் உயிரோடு கருகினா். தகவலறிந்த காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உள்ளூா் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். இவா்களில் 7 போ் மிா்சாபூா் மாவட்டத்தையும், ஒருவா் சோன்பத்ரா மாவட்டத்தையும் சோ்ந்தவா்கள். மீதமுள்ள 3 போ், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா்களாவா்.
மோதிய வேகத்தில் வாகனங்கள் கடுமையாக நொறுங்கியதால், உடல்களை மீட்பது கடும் சவாலாக இருந்தது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
முதல்வா் உத்தரவு: மிா்சாபூா் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் யோகி ஆதித்யநாத், அரசுத் தரப்பில் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: மிா்சாபூா் சாலை விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனா்.
உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வால்பாறை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

வருமான வரித்துறை சோதனை: பாளை.யில் ரூ.2 கோடி பணம், நகைகள் சிக்கின!

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: தொழிலாளா்கள் மூவா் படுகாயம்

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


