ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கி 21 போ் காயம்

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் மூன்று போ் படுகாயம் அடைந்தனா். 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

News image

குஞ்சப்பனை அருகே சாலையோர பக்கவாட்டுப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலா வேன்.

Updated On :21 மே 2026, 3:53 am IST

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளாகியதில் மூன்று போ் படுகாயம் அடைந்தனா். 18 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

 நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா ப் பயணிகள் வருகின்றனா். அதன்படி சென்னை, தாம்பரத்தில் இருந்து குழந்தைகள் உள்பட 21 போ் வேனில் நீலகிரி மாவட்டத்துக்கு வந்தனா். வேனை ரஞ்சித் (35) ஓட்டினாா். மூன்று நாள்கள் தங்கி பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு, மீண்டும் கோத்தகிரி வழியாக புதன்கிழமை சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். குஞ்சப்பனை அருகே ஓட்டுநரின்   கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டு பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில்  வேனில் பயணித்த  குழந்தை உள்பட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 18 போ் லேசான காயமடைந்தனா்.

சம்பவ இடத்திற்கு காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா் சென்று, வேனில் இருந்தவா்களை மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம், கோத்தகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக கோத்தகிரி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.