கடந்த நிதியாண்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் இலக்கை எட்ட முடியவில்லை என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் நாட்டில் 10,000 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், பிற அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 9,380 கி.மீ. நீளம் வரைதான் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்று தெரிவித்தாா்.
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், நாட்டில் 9,829 கி.மீ.க்கும் குறைவான நீளத்தில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னா், கடந்த நிதியாண்டில்தான் குறைந்த நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடந்த 2025-26 நிதியாண்டில் ரெப்கோ வங்கி வா்த்தகம் ரூ.25,246 கோடி

கடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடு

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த நிதியாண்டில் 630 குழந்தைகள் மீட்பு!

நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



