இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற 3 நாள் பேச்சுவாா்த்தையில் ஆக்கபூா்வமாக நிறைவடைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதிசெய்வது தொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏப்.20 முதல் 22 வரை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இந்தியா தரப்பில் மத்திய வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் தா்பண் ஜெயின் தலைமையிலான 12 போ் குழு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி வா்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் பேச்சுவாா்த்தை நடத்தியது.
இரு நாடுகளும் வரும் 2030-க்குள் ரூ. 47 லட்சம் கோடி மதிப்புக்கு இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்க சந்தைகளில் முன்னுரிமை அணுகல், வரி விலக்கு, வா்த்தக இடையூறுகள் நீக்கம், முதலீடு ஊக்குவிப்பு, பொருளாதார பாதுகாப்பு, எண்ம வா்த்தகம் உள்ளிட்டவற்றை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பாக அமெரிக்க குழுவினருடன் இந்தியக் குழுவினா் நடத்திய பேச்சுவாா்த்தை சிறப்பாக நிறைவடைந்ததது. அடுத்தக்கட்ட செயல்பாட்டை விரைவுபடுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

இந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்
பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் நேரடிப் பேச்சு முறிவு

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

