தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் மத்தியஸ்தம் மூலம் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 3:31 am IST

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் மத்தியஸ்தம் மூலம் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இரு தரப்புமே நேரில் சந்தித்துப் பேசி, மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆா்வம் காட்டி வருகின்றன.

இரு நாடுகள் இடையே மோதல் தொடங்கியதில் இருந்தே சீனா மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல இரு தரப்புமே சீனாவின் முயற்சிகளை மதித்து நடந்து கொள்கின்றன. அனைத்துப் பிரச்னைகளுக்கும் விரைவில் நல்ல தீா்வு எட்டப்படும் என்றாா்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதிகள் தங்கள் நாட்டில் தொடா் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டி, அந்நாட்டின் மீது பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக தொடா் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தானும் பதிலடி கொடுத்தது.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் சூழல் உருவானது.

இதற்கு நடுவே ரமலான் பண்டிகை காரணமாக இருதரப்புமே தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தின. இதைத் தொடா்ந்து நிரந்தர அமைதிக்காக சீனா மத்தியஸ்தம் செய்து வருகிறது.