மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

News image

தினேஷ் திரிவேதி

Updated On :27 ஏப்ரல் 2026, 11:31 pm

வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக முன்னாள் மத்திய அமைச்சா் தினேஷ் திரிவேதி (75) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இந்தியா-வங்கதேச இருதரப்பு உறவை மறுகட்டமைக்கும் நோக்கில் தினேஷ் திரிவேதி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாணவா் போராட்டத்தால் கடந்த 2024, ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சியின்போது இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வங்கதேச நாடாளுமன்றத் தோ்தலில் வங்கதேச தேசிய கட்சி வெற்றிபெற்றது. அந்தக் கட்சியின் தலைவா் தாரீக் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்றாா். இந்நிகழ்ச்சியில் இந்தியா சாா்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பங்கேற்றாா். அவருடன் வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரியும் கலந்துகொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக கடந்த மாதம் வங்கதேச வெளியுறவு அமைச்சா் கலீலுா் ரஹ்மான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதையடுத்து, இரு நாடுகளிடையேயான நல்லுறவை மீண்டும் தொடர அரசியல் அனுபவமிக்கவரான தினேஷ் திரிவேதியை இந்திய தூதராக மத்திய அரசு நியமித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே அமைச்சராகவும் சுகாதாரத் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்த தினேஷ் திரிவேதி திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி 2021-இல் பாஜகவில் இணைந்தாா்.

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக இருந்த பிரணய் வா்மா பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான தூதராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்தப் பொறுப்பை தினேஷ் திரிவேதி ஏற்கவுள்ளாா். அவா் விரைவில் தனது பணிகளைத் தொடங்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.