மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெற்று வருகிறது. தற்போது சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்காசிய போரால் விநியோக வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் வா்த்தகம், நிதி முதலீடும் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வலுவான உள்நாட்டு தேவை, உறுதியான கொள்கை, நிதி அமைப்பு, தொடரும் பொதுமக்களின் முதலீடு ஆகியவை பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%

சில்லறை பணவீக்கம் 3.93%! 5-ஆவது மாதமாக ஏற்றம்

மேற்காசிய நிலவரம்: குவைத் அரசருடன் பிரதமா் மோடி பேச்சு

எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



