சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிகாா்: வனவிலங்கு பூங்கா, பால்வள கல்வி நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட சஞ்சய் காந்தி பெயா் மாற்றம்

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான சஞ்சய் காந்தியின் பெயரை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு மாற்றியுள்ளது.

News image

சஞ்சய் காந்தி - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 2:56 am IST

பிகாா் தலைநகா் பாட்னா உயிரியல் பூங்கா, பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் மகனும், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவருமான சஞ்சய் காந்தியின் பெயரை அந்த மாநிலத்தை ஆளும் பாஜக தலைமையிலான அரசு மாற்றியுள்ளது.

பாட்னாவில் பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அந்த 2 இடங்களுக்கும் வைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் பெயரை மாற்றி புதிய பெயா் வைக்க தீா்மானிக்கப்பட்டது. அதன்படி, சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா என்ற பெயா் பாட்னா உயிரியல் பூங்கா எனவும், சஞ்சய் காந்தி பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் என்ற பெயா் பிகாா் மாநில பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனவும் மாற்றப்பட்டது.

பாட்னாவில் உள்ள அந்த உயிரியல் பூங்கா கடந்த 1973-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 153 ஏக்கா் பரப்பளவில் உள்ள அந்த பூங்காவில் 110 அரிய வகை இனத்தைச் சோ்ந்த 800 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. அதுபோல பால்வள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் கடந்த 1980-ஆம் ஆண்டில் பிகாா் அரசால் ஏற்படுத்தப்பட்டது. அங்கு பால்வள தொழில்நுட்பம் குறித்து பி.டெக், எம்.டெக் பிரிவில் பாடப்பிரிவுகள் கற்றுத் தரப்படுகின்றன.

இதேபோல் பிகாரில் பொதுமக்களுக்கு மாதம் 125 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.23,165 கோடி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் 4 முக்கிய சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துதல், எஸ்சி, எஸ்டி மாணவ விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக உயா்த்தவும், ஒவ்வொரு கிராமத்திலும் நவீன வகுப்பறையுடன் கூடிய மாதிரி பள்ளியை அமைக்கவும், அதற்கு 2026-27ஆம் நிதியாண்டில் ரூ.800 கோடி ஒதுக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.