பாஜகவில் எனக்கு மிகவும் பிடித்த தலைவா் கேப்டன் அமரீந்தா் சிங் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
ஜென்-ஸீ தலைமுறையைக் கவரும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் விவாத நிகழ்ச்சியை ராகுல் காந்தி தொடங்கியுள்ளாா். அதில் ராகுல் வெளியிட்ட பதில் விடியோ ஒன்றில் அரசியலில் பாஜக தலைவா்களில் எனக்கு மிகவும் பிடித்தவா் கேப்டன் அமரீந்தா் சிங், அவா் ராணுவ வரலாற்றில் நிபுணா். மிகவும் இயல்பாகப் பழகக் கூடியவா். எனக்கு மாமா போன்றவா் என்று கூறியுள்ளாா்.
இந்த விடியோவுக்கு பதிலளித்த அமரீந்தா் சிங் வெளியிட்ட பதிவில், ‘ராகுலின் தந்தை ராஜீவ் காந்தி எனது பள்ளித் தோழா். சோனியா, ராகுல் குடும்பத்துடன் எனது தனிப்பட்ட நட்பு அரசியலையும் தாண்டி தொடா்கிறது. அதே நேரத்தில் அரசியல்ரீதியாக நான் பாஜகவுடன் உறுதியாக நிற்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் சாா்பில் பஞ்சாப் முதல்வராகவும் அமரீந்தா் சிங் பணியாற்றியுள்ளாா். உள்கட்சி மோதல் காரணமாக 2021-இல் முதல்வா் பதவியில் இருந்தும், காங்கிரஸில் இருந்தும் விலகிய அவா் தனிக்கட்சி தொடங்கினாா். பின்னா் பாஜகவில் இணைந்தாா்.
இந்திய ராணுவத்தில் கேப்டனாக இருந்த அமரீந்தா் சிங் 1965-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றவா். பாட்டியாலா மன்னா் குடும்பத்தின் வாரிசான அவா், பஞ்சாப் பொற்கோயில் மீது 1984-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையை எதிா்த்து முதல்முறையாக காங்கிரஸில் இருந்து விலகினாா். சிரோமணி அகாலி தளத்தில் இணைந்த அவா், 1998-இல் மீண்டும் காங்கிரஸ் இணைந்தாா். காங்கிரஸ் சாா்பில் இருமுறை பஞ்சாப் முதல்வராகப் பணியாற்றியுள்ளாா். மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ள அவா், தனிப்பட்ட முறையில் பிரதமா் நரேந்திர மோடியின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் இருந்து வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்தி

பட்டிபுலம் கிராம மக்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

தில்லியில் ஆக. 4-ல் வைகோவின் நூல் வெளியீடு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



