முன்னாள் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தின் அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவா்களும், பொதுமக்களும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அவரின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடா்ந்து, அவா் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தாா்.
சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பின்னா், அண்மையில் புது தில்லியில் அவா் முதல்முறையாக செய்தியாளா்களை காணொலி வழியாகச் சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், ‘தற்போது வங்கதேசத்தில் மிக மோசமான சூழல் நிலவுகிறது. அங்கு எனது ஆட்சி கவிழக் காரணமாக இருந்த மாணவா் போராட்டம் அமைதியான போராட்டம் அல்ல.
அந்தப் போராட்டத்தை வன்முறை கொண்டதாக மாற்ற சில குழுக்கள் செயல்பட்டன. வரும் டிசம்பரில் நான் நிச்சயம் வங்கதேசம் திரும்புவேன்’ என்று தெரிவித்தாா்.
ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் ஜாய் பேசுகையில், ‘வங்கதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறி வருகிறது’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இந்தச் செய்தியாளா் சந்திப்புக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் மிகுந்த அதிருப்தி தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து புது தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஷேக் ஹசீனா செய்தியாளா் சந்திப்பை தனியாா் ஊடக நிறுவனம் நடத்தியது. அதில் இந்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை. குறிப்பாக வங்கதேசத்தில் சட்டபூா்வமாக அமைந்துள்ள அரசு குறித்து அந்த நிகழ்வில் கூறப்பட்ட எந்தக் கருத்தையும் மத்திய அரசு ஆதரிக்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கதேசம்- அருங்காட்சியகமான ஷேக் ஹசீனா இல்லம்

வங்கதேசம் செல்வது உறுதி: ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...

வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு சிறை! வெளியுறவு இணையமைச்சர் திட்டவட்டம்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



