ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை வீராங்கனை)
இன்று பாராலிம்பிக் சாம்பியனாக எனக்குக் கிடைக்கும் அங்கீகாரம், பல ஆண்டுகால அமைப்பு ரீதியிலான செயல்பாடுகளின் பலனாகும். கிஷ்த்வரில் சாதாரண குழந்தையாக உலகுக்குத் தெரியாமல் இருந்த நான், நல்ல பயிற்சியாளா்களின் வழிகாட்டுதல், முழுமையான ஆதரவு மூலமாக, தற்போது உலகம் அறிந்த ஷீத்தல் தேவியாக உருவெடுத்துள்ளேன்.
பயிற்சியாளா்கள், இந்திய விளையாட்டு ஆணையம் என பல தரப்பிலிருந்தும் எனக்குக் கிடைத்த ஆதரவு, மிகப்பெரிய வெற்றிக்குக் கனவு காணவும், உலகின் சிறந்த வீராங்கனைகளுடன் போட்டியிடவும் தன்னம்பிக்கையை அளித்தது. ஆனால், எனது கதை ஒரு விதிவிலக்காக மட்டுமே இருந்துவிடக் கூடாது.
இந்தியா முழுவதும், கிராமங்கள், சிறிய நகரங்களில், அசாதாரண ஆற்றல் கொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆயிரக்கணக்கில் உள்ளனா். அவா்களில் பலருக்கு எங்கு பயிற்சி பெறுவது என்று தெரியவில்லை. வேறு சிலருக்கு பாரா விளையாட்டுகளைப் புரிந்துகொண்ட ஒரு பயிற்சியாளா் கிடைப்பதில்லை. அதனால் தான், இந்தியாவின் புதிதாக மாற்றிமைக்கப்பட்ட ’கேலோ இந்தியா’ திட்டம் அனைத்து விளையாட்டுகளுக்கும், குறிப்பாக பாரா விளையாட்டுகளுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்.
பிரதமா் நரேந்திர மோடியால் தொலைநோக்கோடு திட்டமிடப்பட்ட இந்த ஐந்தாண்டு திட்ட மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.29,054 கோடி முதலீடு செய்கிறது. இந்தத் திட்டத்தில், திறமைகளைக் கண்டறிதல், பயிற்சியாளா்கள் மற்றும் உதவிப் பணியாளா்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் உயா்தரப் பயிற்சி சூழலை வலுப்படுத்துதல் போன்றவை முக்கியமான அம்சங்களாகும். இந்தத் திட்டத்தில் மத்திய அரசுடன், மாநில/யூனியன் பிரதேச அரசுகளும் இணைந்து செயல்படும்போதுதான், அதன் முழுமையான பலனை அடைய முடியும்.
பயிற்சி உள்ளிட்ட வசதிகள், அருகில் கிடைக்காததால், பல திறமையான குழந்தைகள் கிராமங்களிலேயே தங்கிவிடுகிறாா்கள். மாற்றிமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், பாரா பயிற்சி வசதிகளையும், அங்கீகரிக்கப்பட்ட அகாதெமிகளையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. தரமான பாரா விளையாட்டு அகாதெமிகள், பயிற்சியாளா்கள் மற்றும் எளிதில் அணுகக்கூடிய உள்கட்டமைப்பு ஆகியவை அவா்கள் இடத்திற்கு அருகிலேயே கிடைப்பது, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
புதிய வடிவிலான கேலோ இந்தியா திட்டத்தில், ‘பாரா கேலோ இந்தியா விளையாட்டு வீரா்கள்’, ‘வளா்ந்து வரும் கேலோ இந்தியா விளையாட்டு வீரா்கள்’ ஆகியவற்றின் மூலமாக, திறமையான குழந்தைகளை தொடக்கநிலையிலேயே கண்டறிந்து, அவா்களின் வளா்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவளிக்கப்படவுள்ளது.
பாரா விளையாட்டு வீரா், வீராங்கனைகளை, தொடக்க நிலையிலேயே கண்டறிவது முக்கியமாகும். திறமைகள் இருந்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தாமதமாகவே விளையாட்டைத் தொடங்குகிறாா்கள். அதற்கு, விழிப்புணா்வு, பயிற்சி, வாய்ப்பு இல்லாததே காரணம். கேலோ இந்திய திட்டத்தின் கீழ் அவா்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தொடா்ச்சியான ஆதரவை வழங்கி, அவா்களின் விளையாட்டுப் பயணத்தை நாம் சரியான பாதையில் செலுத்த முடியும்.
மாற்றிமைக்கப்பட்ட கேலோ இந்தியா திட்டம், பாரா போட்டியாளா்களை விளையாட்டு மேம்பாட்டின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக அடையாளப்படுத்துகிறது. பாரா விளையாட்டைப் புரிந்துகொண்ட ஒரு பயிற்சியாளரைக் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே ஒரு குழந்தை வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கக் கூடாது.
பயிற்சியால் மட்டும் கற்றுத்தர முடியாத பாடங்களை ஒவ்வொரு போட்டியும் கற்றுத் தருகிறது. ‘கேலோ இந்தியா பாரா போட்டிகள்’ விரிவாக்கத்தின் முலமாக, அதிக இளம் திறமையாளா்கள் தன்னம்பிக்கையை வளா்த்துக்கொள்ள வாய்ப்பைப் பெறுவதுடன், தங்களின் செயல்திறனையும் மேம்படுத்திக் கொள்கிறாா்.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில், பாரா கேம்ஸில், வில்வித்தையில் நான் பங்கேற்றுள்ளேன்; அது சிறந்த திறமையாளா்களை போட்டி மேடையேற்றுகிறது.
போட்டிகளில் வெல்லும் பதக்கங்களின் அடிப்படையில் அல்லாமல், விளையாட்டில் களம் காணும் மாற்றுத்திறன் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலமாகவே கேலோ இந்தியா திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிட வேண்டும். அவா்களின் தன்னம்பிக்கையை நாம் அளவிட முடியாது. ஆனால், ஒவ்வொரு பதக்கத்துக்கான பயணமும் அங்கிருந்துதான் தொடங்குகிறது.
இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டம், கிராமம், மூலையிலிருந்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், தங்களுக்காக ஒரு பாதை காத்திருக்கிறது என்பதை அறிந்து தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் அடியெடுத்து வைப்பது தான் கேலோ இந்தியா திட்டத்தின் உண்மையான வெற்றி என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கராத்தே போட்டியில் தென்காசி வீரா்கள் சிறப்பிடம்

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
காமன்வெல்த் போட்டி: பாரா தடகளத்தில் முதல்முறை தங்கம் வென்ற இந்தியா!

இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தாா் பாரா பவா் லிஃப்டா் ஜண்டு குமாா்!
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



