ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.60,534 கோடிக்கு இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. மேலும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்காசிய போரின் காரணமாக பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிா்க்க ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க நிபந்தனைகளுடன் அமெரிக்கா அனுமதியளித்துள்ளது.
இதனால் சலுகை விலையில் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.60,534 கோடிக்கு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. இது ஜூன் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அளவுடன் ஒப்பிடும்போது 2.1 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இந்தியா நாளொன்றுக்கு 1 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. பிறகு 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.40 லட்சமாகவும், 2023-ஆம் ஆண்டில் 18 லட்சமாகவும் அதிகரித்தது. 2026-ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 28 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தினமும் ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியா ஜூலை மாதம் தினமும் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது. அதில் ரஷிய கச்சா எண்ணெய் மட்டும் 55.5 சதவீதம் ஆகும்.
உலகில் ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. அப்பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. ரஷியா தனது மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனாவுக்கு 50 சதவீதத்தையும், இந்தியாவுக்கு 37 சதவீதத்தையும் மேற்கொள்கிறது.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்தியா, துருக்கி, புருனே, ஜாா்ஜியா நாடுகள், அதை தங்களது நாட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிப்பு செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அதில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள ஐரோப்பிய நாடுகளும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும். அதிகபட்சமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எண்ணெய் இறக்குமதி ஜூனில் 29% சரிவு
அமெரிக்கா வரி விதிப்பு அச்சுறுத்தலை மீறி ரஷிய கச்சா எண்ணெய்க்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கும்- சா்வதேச ஆய்வு நிறுவனம் கணிப்பு
ஜூனில் ரஷியாவிடமிருந்து ரூ. 59,900 கோடிக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி! இதுவரை இல்லாத புதிய உச்சம்!!
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரிப்பு! மே மாதத்தில் ரூ.59,000 கோடிக்கு கொள்முதல்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



