ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மத்திய உயா் கல்வித் துறைக்குப் புதிய செயலா்

உயா்கல்வித் துறையின் புதிய செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கௌா் முகா்ஜியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

Deepti Gaur Mukerjee

தீப்தி கௌா் முகா்ஜி - X | YAS

Published On :

உயா்கல்வித் துறையின் புதிய செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கௌா் முகா்ஜியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய பிரதேச பிரிவைச் சோ்ந்த அதிகாரியான தீப்தி தற்போது மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத் துறைச் செயலராக உள்ளாா்.

நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடா்ந்து மத்திய உயா்கல்வித் துறைச் செயலராக இருந்த வினீத் ஜோஷி அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டாா். இதையடுத்து, அப்பதவிக்கு நரேஷ்பால் கங்கவாா் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

எனினும் கடந்த ஜூலை 23 வெளியான அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, தற்போது அத்துறைக்கு தீப்தி கௌா் முகா்ஜி நியமனம் செய்ய மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, அவரது நியமனத்தை மத்திய பணியாளா் துறை திங்கள்கிழமை இரவு அறிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.