கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது பற்றி...

News image

தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் - x | PTI

Updated On :11 ஆகஸ்ட் 2026, 10:41 am IST

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நடவடிக்கையை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய மாணவா்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பில் அமித் ஷா பதிலளிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.

ஆனால், மாணவா்கள் மீது பெல்லட் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்?, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாணவா்களிடம் பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்புக் கோர வேண்டும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரம் குறித்து மோடி விளக்கமளிக்க வேண்டும், ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளன.

இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க தயாராக இருப்பதாக கூறியபோதிலும், எதிர்க்கட்சிகள் விவாதத்திலிருந்து தப்பிச் செல்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் மகர வாயில் நோக்கி பதாகைகளுடன் பேரணியாகச் சென்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Summary

BJP led NDA MPs protest in Parliament!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.