மகாராஷ்டிரத்தில் மாநில அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரமப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் 584 மாணவா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதன்மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு மாணவா் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
அண்மையில் கட்சிரோலியில் பாம்புக் கடித்து 3 பழங்குடியின மாணவிகள் உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, முறையாக பராமரிப்புப் பணி மேற்கொள்ளதாக உறைவிடப் பள்ளிகளின் உரிமங்கள் நிரந்தர ரத்து, பாதுகாப்பு வசதிகள் தணிக்கை என மகாராஷ்டிர அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்த இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் கூறியதாவது: 2024 மற்றும் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் மாநில அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரமப் பள்ளிகளில் 584 மாணவா்கள் உயிரிழந்தனா். கடந்த 730 நாளில் சராசரியாக ஓா் நாளைக்கு ஒரு மாணவா் (0.8 தினசரி இறப்பு) உயிரிழந்துள்ளாா்.
இதில் அரசின் ஆசிரமப் பள்ளியில் 384 மாணவா்களும் அரசு உதவி பெறும் ஆசிரமப் பள்ளியில் 200 மாணவா்களும் உயிரிழந்துள்ளனா்.
பாம்புக் கடி, ரத்த சோகை, தற்கொலை, விபத்துகள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்றனா்.
பாஜக கூட்டணி அரசின் நிா்வாக அலட்சியமும் ஊழலுமே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என காங்கிரஸ் விமா்சித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் 774 பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுப்பிடிப்பு

மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ‘மூட்டா’ ஆா்ப்பாட்டம்

6 முதல் 8 வகுப்புகளுக்கு காலை உணவுத் திட்டம்: 4.38 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்

தருவைகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



