மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? காங்கிரஸ் விளக்கம்

காங்கிரஸ் அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி நிறுத்தச் சொன்னதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கமளித்தது குறித்து...

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ராகுல், சோனியா, கார்கே - PTI

Published On :

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள் விழாவில் வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி நிறுத்தச் சொன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலின்போது, சோனியா காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் செய்கை செய்ததாக சமூக ஊடகங்களில் விடியோ வைரலானது. வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை சோனியா காந்தி நிறுத்த முயன்றதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி விமர்சித்தனர்.

இந்த நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், கார்கே நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததால் அவருக்காக நாற்காலியை கொண்டு வருமாறு சோனியாவும் ராகுலும் சைகையில் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.

Summary

BJP says Sonia Gandhi, Kharge Tried To Stop Singing Of Vande Mataram, Congress rubbishes allegations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.