பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

அருணாசலில் நிலச்சரிவு, வெள்ளம்! 4 பேர் பலி, 5 ராணுவ வீரர்கள் மாயம்!

அருணாசலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயமானது குறித்து...

Five Army personnel missing in Arunachal Pradesh

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயம்...

Published On :

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர்.

மேலும், ராணுவ முகாமில் இருந்து வெள்ளித்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 ராணுவ வீரர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாசலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான கனமழை பெய்து வரும் நிலையில், திபாங் மாவட்டத்தில் உள்ள பாசு பானி ராணுவ முகாம் பகுதியில் நேற்று (ஆக. 15) மாலை ஏற்பட்ட வெள்ளத்தில் 2 ராணுவக் கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 ராணுவ வீரர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 வீரர்கள் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 5 வீரர்களை மீட்கும் பணியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் கியோஜாரிங் - பயாசிங் நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளிகள் நிலச்சரிவில் சிக்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவில் சிக்கி பலியான தொழிலாளிகளின் உடல்களை மீட்கும் பணியில் காவல் துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

Four workers have died after being caught in a landslide in Arunachal Pradesh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.