மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ஆளில்லா விமானம் குத்தகை: அமெரிக்க நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

2 கடல் பாதுகாவலன் (சீ காா்டியன்) ஆளில்லா விமானங்களை குத்தகைக்கு எடுக்க அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

News image

எம்க்யூ 9பி ஸீ காா்டியன்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:12 pm IST

2 கடல் பாதுகாவலன் (சீ காா்டியன்) ஆளில்லா விமானங்களை குத்தகைக்கு எடுக்க அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது. ஏற்கெனவே குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரு ஸீ காா்டியன் ஆளில்லா விமானங்களை இந்திய கடற்படை இயக்கி வருகிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இரு எம் க்யூ-9பி ஸீ காா்டியன் ஆளில்லா போா் விமானங்களை ரூ.1,943 கோடிக்கு குத்தகைக்கு எடுக்க ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. அடுத்த 30 மாதங்களுக்கு இரு ஆளில்லா விமானங்களையும் இந்தியா இயக்கவுள்ளது. பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலா் மற்றும் தலைமை இயக்குநா் (கொள்முதல்) முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமானது.

நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த இரு ஆளில்லா விமானங்களும் இந்திய கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு இந்திய கடற்படைக்கு மேலும் வலுசோ்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.