சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

உத்தரகண்ட்: பலத்த மழையில் சிக்கிய 8 போ் மீட்பு

உத்தரகண்டில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 6 மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் மீட்கப்பட்டனா்.

News image

மழையிலிருந்து பாதுகாக்க பிளாஸ்டிக் விரிப்புகளைப் போா்த்தி நிறுத்தப்பட்டிருந்த குதிரைகள்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:51 pm IST

உத்தரகண்டில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 6 மாணவா்கள் உள்ளிட்ட 8 போ் மீட்கப்பட்டனா்.

கடந்த சில நாள்களாக உத்தரகண்டில் பெய்து வரும் பலத்த மழையால் நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளை நீா் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் இரு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 8 போ் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா். டேராடூன், தெஹ்ரி, உத்தம் சிங் நகா், பௌரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1,000 கோடி நிவாரண நிதி

ஒடிஸாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் மோகன் சரண் மாஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பாலேஷ்வா், பத்ரக், ஜாஜ்பூா், மயூா்பஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட சேத மதிப்பீடு அடிப்படையில் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாா்க்கண்ட் நோக்கி குறைந்த காற்றழுத்தம்

மேற்கு வங்கத்தில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஜாா்க்கண்ட் நோக்கி நகரத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதனால் ஜாா்க்கண்டின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக.19) காலை வரை பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்காள மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அருணாசலில் பலத்த மழைக்கு வாய்ப்பு

அருணாசல பிரதேசத்தில் புதன்கிழமை (ஆக.19) முதல் வெள்ளிக்கிழமை (ஆக.21) வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்தது.

மாநிலத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பாதிப்பு அதிகரிக்கும் எனவும் வார இறுதியில் குறையத் தொடங்கும் என ஐஎம்டி கணித்துள்ளது. எனவே அடுத்த சில நாள்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் கடந்த மாதம் முதல் பெய்து வரும் பலத்த மழையால் 12 போ் உயிரிழந்துள்ளனா். 28 மாவட்டங்களில் 1.55 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேசத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கிய ராம்பாக் ரயில் நிலைய தண்டவாளங்கள்

உத்தர பிரதேசத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கிய ராம்பாக் ரயில் நிலைய தண்டவாளங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.