FOLLOW US

ON GOOGLE DISCOVER

இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

யானைகளுக்காக நின்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ்... நெகிழ வைத்த தருணம்!

ராஜ்தானி எக்ஸ்பிரஸை நிறுத்தியது பற்றி...

News image

அஸ்ஸாம், ரயில் பாதையைக் கடக்கும் யானைகள் கூட்டம் - X

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST

அஸ்ஸாமின் ஹோஜாய் மாவட்டத்தில் காட்டு யானைகள் கூட்டம் ரயில் பாதையைப் பாதுகாப்பாகக் கடந்து செல்வதற்காக ராஸ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.

அதிகாரிகள் கூற்றுப்படி,

வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு, உடனடி எச்சரிக்கை நடவடிக்கை, வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் ஒருங்கிணைப்பு ஆகியவை ஹோஜாய் மாவட்டத்தில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற உதவியது.

ஹோஜாய் மாவட்டத்தின் லங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஹவாய்ப்பூர் பகுதியில், 'டவுன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ​​வனத்துறையினர் யானைக் கூட்டம் ரயில் பாதையைக் கடக்க முயல்வதைக் கண்டனர்.

வனத்துறையினர், ரயில் ஓட்டுநர் (லோகோ-பைலட்) மற்றும் லும்டிங் ரயில்வே கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் துரித நடவடிக்கையால், யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து சென்றது உறுதி செய்யப்பட்டது. அதன்பின் ரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இந்த நெகிழ்ச்சியான விடியோவை அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

ரயில் பாதையில் ஒரு எதிர்பாராத நிறுத்தம்; ஆனால் அது நம் அன்பிற்குரிய பிரம்மாண்டமான விலங்குகள் கடந்து செல்வதற்காக மட்டுமே.

இன்று காலை, ஹோஜாய் மாவட்டம், நாகான் தெற்குப் பிரிவு, லங்கா சரகத்திற்கு உள்பட்ட ஹவாய்ப்பூர் பகுதியில் யானைக் கூட்டம் பாதையைக் கடக்க முற்பட்டதால், 'டவுன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் நிறுத்தப்பட்டது."

வனத்துறை ஊழியர்கள், ரயில் ஓட்டுநர் மற்றும் லும்டிங் ரயில்வே கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையால், யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து செல்வது உறுதி செய்யப்பட்டதுடன், ரயில் தனது பயணத்தையும் தொடர்ந்தது. மற்றொரு நாள், மற்றொரு பாதுகாப்பான கடப்பு! என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாளும், வனத்துறை ஊழியர்கள் அர்ப்பணிப்புடனும், விழிப்புடனும் இருந்து, அமைதியான முறையில் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். இவை அமைதியான கதைகளாக இருக்கலாம், ஆனால் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையாகும்," என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

A Rajdhani Express was halted in Assam's Hojai district on Wednesday morning so that a herd of wild elephants could cross the railway tracks safely.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.