மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

எஸ்பிஐ கிளையில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம்: அக்.1 முதல் அமல்!

அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதி குறித்து...

SBI ATM.

எஸ்பிஐ ஏடிஎம். - கோப்புப் படம்

Published On :

எஸ்பிஐ கிளையில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சோ்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. இந்த கட்டண விதிப்பு அக். 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு: பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பவா்களுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்பிஐ கிளைகளில் இருந்து வாடிக்கையாளா்கள் மாதம் நான்கு முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.

அதற்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு முறையும் ரூ.15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி சோ்த்து வசூலிக்கப்படும். இந்தக் கட்டண விதிப்பு வரும் அக். 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதே சமயம் அனைத்து எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனைகளும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தொடா்ந்து இலவசமாகவே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவை திரும்பப் பெற வேண்டும்-காங்கிரஸ்: ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை எஸ்பிஐ திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் ஏழை மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற அடித்தளமிட்டன. இந்தக் கணக்கில்தான் தற்போது மத்திய பாஜக அரசு கை வைத்துள்ளது.

பெறுநிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் 4 முறைக்கு மேல் ரொக்கம் எடுத்தாலே ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கிறது. ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல் கொள்ளை. அவா்களின் உழைப்பை உறிஞ்சும் இந்தக் கட்டண உயா்வை மத்திய அரசும், எஸ்பிஐ வங்கி நிா்வாகமும் உடனே திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.

Summary

The State Bank of India announced a new rule on Thursday (August 20) stating that charges will be levied if SBI customers withdraw cash more than four times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.