தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

எஸ்பிஐ ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் + ஜிஎஸ்டி: மாணிக்கம் தாகூர் கண்டனம்

எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் வசூலிக்கப்படும் எனும் முறைக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம் குறித்து...

Manickam Tagore

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 10:53 am IST

எஸ்பிஐ அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற புதிய விதிமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், இந்த கட்டணக் கொள்ளையை மோடி அரசும், எஸ்பிஐ நிர்வாகமும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஏடிஎம்-ல் அடிப்படைச் சேமிப்பு வைப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்குக் கட்டணம் + ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற புதிய விதியை பாரத ஸ்டேட் வங்கி வியாழக்கிழமை (ஆக. 20) அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, மாதத்தில் நான்கு முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுக்கும் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.15 மற்றும் அதனுடன் கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.

இருப்பினும், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எஸ்பிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் கண்டனம்

இந்த நிலையில், எஸ்பிஐ ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் + ஜிஎஸ்டி கட்டணம் விதிமுறைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதவில் தெரிவித்திருப்பதாவது:

காங்கிரஸ் அடித்தளமிட்டது

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு 2005 -ல் 'எளிமையான' கணக்குகளாக அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 2012-ல் வழிகாட்டுதல்களை மேம்படுத்தி உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி கட்டமைப்புதான் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு(பிஎஸ்பிடிஏ) ஜீரோ பேலன்ஸ் கணக்குகள். ஏழை எளிய சாமானிய மக்கள் நவீன வங்கிச் சேவையைப் பெற காங்கிரஸ் அடித்தளமிட்டது.

இந்த அடிப்படைச் சேமிப்புக் கணக்கு அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு இருக்காது; நம் நாட்டின் ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த அடிப்படைச் சேமிப்புக் கணக்கு கணக்கில்தான் மோடி அரசு கை வைக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும் பாஜக அரசு, ஏழை மக்கள் பயன்படுத்தும் இந்த அடிப்படைச் சேமிப்புக் கணக்கில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலே ரூ.15 + ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கிறது.

மக்கள் பணப் பயன்பாட்டை விட்டுவிட்டதாக ஆட்சியாளர்கள் பகல்கனவு காண்கிறார்களா?

தீவிரமாக உயரும் ரொக்கப் பயண்பாடு

கிராமப்புற மக்கள் இன்றும் ரொக்கப் பணத்தையே நம்பியுள்ளனர். பொதுமக்களிடம் புழங்கும் ரொக்கப் பணம் 2024-25ல் 6.5%, 2025-26ல் 12.0%, தற்போது 2026-27ல் 12.9% என மீண்டும் தீவிரமாக உயர்ந்து வருகிறது. உண்மை நிலவரம் இப்படியிருக்க, ஒருபுறம் வரவிருக்கும் யுபிஐ மறைமுகக் கட்டணங்கள், மறுபுறம் ஏழை மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கே அபராதம் விதிப்பது அப்பட்டமான பகல்கொள்ளை.

திரும்பப் பெற வேண்டும்

ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த கட்டணக் கொள்ளையை மத்திய மோடி அரசும், எஸ்பிஐ நிர்வாகமும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! மக்கள் பணம் மக்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்; அதில் கட்டணம் என்ற பெயரில் கை வைத்து நீங்கள் அபகரிக்காதீர்கள்! என அவர் கூறியுள்ளார்.

Summary

Four cash withdrawals in a month wii continue to be free and cash withdrawal transactions beyond four in a moth wii attract a charge of 15 + GST Per transaction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.