
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள்: 13,343 தேர்வர்களுடன் இன்று தொடங்கியது
யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் இன்று தொடங்குவது பற்றி...

பிரதிப் படம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுகள் இன்று (ஆக. 21) தொடங்குகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வுகள் (Mains) இன்று (ஆக. 21) காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுகள் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும்.
இந்திய நிர்வாகப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட உயர்நிலை குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகள், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்படி, இந்தாண்டில் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, 8,19,372 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இவர்களில் முதல்நிலைத் தேர்வெழுதியவர்களில் மொத்தம் 13,343 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில், யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுகள் ஆக. 21, 22, 23, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மேலும், தேர்வுகளில் வினாத்தாள்களில் முறையீடுகள் ஏதேனும் இருந்தால், அதுகுறித்த முறையிட வினாத்தாள் முறையீட்டு இணையதளம் (QPReP) தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஆக. 31 முதல் செப். 4, 2026 வரை தேர்வர்களுக்காகத் திறக்கப்படும். வினாத்தாள்கள் தொடர்பான முறையீடுகள் மின்னஞ்சல், தபால் அல்லது வேறு எந்த முறையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது.
Summary
The UPSC Civil Services (Main) Examination 2026 to take place today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






