ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை; மாணவர்கள் கண்டனம்!

ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தது பற்றி...

jharkhand

ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டம். - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 9:41 pm IST

ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் தேர்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள்கள் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தேர்வுகள், ஜேஎஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகியவற்றை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். பாதிக்கப்பட்ட அரசுப் பணியாளர்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், நீதிபதி தீபக் ரோஷன், அரசுத் தேர்வுகளை ரத்து செய்யும் ஜார்க்கண்ட் அரசின் அறிவிப்பை நிறுத்திவைப்பதாக இன்று (ஆக. 20) உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாணவர்கள் பேசியதாவது:

ஜார்க்கண்ட் மாணவர்கள் மீண்டும் ஒன்றுகூட முடியாது என்று முதல்வர் ஹேமத் சோரன் நினைத்தால், அவர் அந்த மாயையிலிருந்து வெளியில் வர வேண்டும். நாங்கள் விரும்பினால், ஜார்க்கண்டின் லட்சக்கணக்கான மாணவர்களை நாளை ராஞ்சிக்கு அழைக்கலாம். கவனமாக ஆலோசித்த பிரகே, இந்தப் பிரச்னையை முடிக்க, நாங்கள் அரசுக்கு இரண்டு மாத கால அவகாசம் கொடுத்தோம்.

ஆனால், அவர்களால் வழக்கை நீதிமன்றத்தில் முறையாக முன்வைக்க முடியாதபோது, ​​இந்த விசாரணையை நாங்கள் எப்படி நம்புவது? முதல்வர் சம்பந்தப்பட்ட வழக்காக இருந்தால், கபில் சிபல் போன்ற வழக்கறிஞர்கள் தில்லியிலிருந்து வருகிறார்கள்.

ஆனால், ஜார்க்கண்ட் மாணவர்களின் இவ்வளவு முக்கியமான ஒரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, ​​தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை. எந்த மூத்த வழக்கறிஞரும் கூட அங்கு இல்லை என்று தெரிவித்தனர்.

Summary

Students condemned the High Court's stay on the order cancelling the Jharkhand examinations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.