75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிரத்தில் அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Abhijeet Dipke diagnosed with typhoid

அபிஜீத் தீப்கே - பிடிஐ

Published On :22 ஆகஸ்ட் 2026, 10:21 pm IST

மகாராஷ்டிரத்தில் அரசுப் பள்ளியில் அத்துமீறி நுழைந்ததாக சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் பிற பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி ‘அரசுப் பள்ளிகளை மேம்படுத்துங்கள்’ என்ற பிரசாரத்தின் கீழ் சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அரசுப் பள்ளிகளுக்குச் சென்று வருகிறார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் லாதூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து உருதுப் பள்ளியில் அவர் பார்வையிடச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து, தீப்கே மற்றும் அவருடன் இருந்தவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மாணவர்களுடன் அமர்ந்து விசாரணை நடத்தியதாகவும், ஆசிரியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் பள்ளிக்கு வருகை தந்தபோது, ​​மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உடன் அழைத்து வரப்பட்டு அங்குள்ள வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பள்ளி குறித்து அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வைப்பதாக மிரட்டியதாகவும் அவர் மீதான புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியின் ஆசிரியரான 53 வயது சையத் ஷம்ஷத் பானோ கைரதாலி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அபிஜீத் திப்கே மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Summary

A case has been registered against CJP founder Abhijit Dipke for trespassing into a government school in Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.