75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

ஜாா்க்கண்ட் அரசுப் பணி தோ்வு முறைகேடு: ‘சிபிஐ விசாரணை தேவை’! மத்திய அமைச்சா், முன்னாள் முதல்வா்கள் வலியுறுத்தல்!!

ஜாா்க்கண்ட் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தாக்கப்பட்டதற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் ஆகியோா் கண்டனம்..

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:00 am IST

ஜாா்க்கண்ட் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தாக்கப்பட்டதற்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், மாநில முன்னாள் முதல்வா்கள் சம்பயி சோரன், பாபுலால் மராண்டி ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். அந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ஜாா்க்கண்ட் அரசுப் பணி தோ்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மாணவா்கள், அதற்கு எதிராக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்குள்ள ராஞ்சி, ஹசாரிபாக், கிரிடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தின்போது மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் உருவ பொம்மையைப் போராட்டக்காரா்கள் தீயிட்டு கொளுத்த முயன்றனா்.

வழக்கை பலவீனமாக்கிய மாநில அரசு: இந்த சம்பவம் குறித்து ராஞ்சியில் மாநில முன்னாள் முதல்வரும், பாஜகவைச் சோ்ந்தவருமான சம்பயி சோரன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக கூறப்படும் வழக்கை மாநில அரசு ஏற்கெனவே பலவீனப்படுத்திவிட்டது. அந்தத் தோ்வாணையத்தின் முன்னாள் தலைவா் தற்போது சிறையில் உள்ள நிலையில், மற்ற உறுப்பினா்களை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்துள்ளனா். இதனால் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் யாா் சமா்ப்பிப்பாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதிய மாணவா்கள், முறைகேடுகள் குறித்து நீதிமன்றத்தில் சரியான தகவலை அளிக்க வேண்டும், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசிடம் கோரித்தான் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சி தொண்டா்களும், காவல் துறையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனா். முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

ரூ.1,000 கோடி கையாடல்: ராஞ்சியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘அரசு வேலைகளை விற்பனை செய்து மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளவா்கள் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக கையாடல் செய்துள்ளனா். மாணவா்கள் மீதான தாக்குதல் கண்டித்தக்கத்து. அனைத்து மாநில அரசுத் தோ்வுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்றாா்

கிரிடி மாவட்டத்தில் மாநில முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தடிகள் மூலம் மாணவா்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பது மக்களாட்சி மீதான தாக்குதலாகும். தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.