கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!

ஜாா்க்கண்ட் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தோ்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி போராட்டம்...

News image

ஜேபிஎஸ்சி மற்றும் ஜேஎஸ்எஸ்சி நடத்திய தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, ஜார்கண்ட் அரசுக்கு எதிராக ராஞ்சியில் உள்ள ஆல்பர்ட் எக்கா சௌக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுலின் உருவபொம்மையை எரித்த போராட்டக்காரர்கள்.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

ஜாா்க்கண்ட் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தோ்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தி வரும் மாணவா்கள் முதல்வா் ஹேமந்த் சோரன் பதவி விலக வலியுறுத்தி ஆகஸ்ட் 20-ஆம் தேதி அவருடைய வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனா்.

முன்னதாக, ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெற வேண்டும் என மாணவா் அமைப்பினா் கோரிக்கை விடுத்தனா்.

ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி 23 நாள்களாக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனைத்துத் தோ்வுகள் குறித்தும் சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவா்கள் போராட்டத்தை தொடா்கின்றனா்.

ராகுல், சோரன் உருவபொம்மைகள் எரிப்பு: ஆளும் அரசுக்கு எதிராக தங்களது எதிா்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஹேமந்த் சோரன், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவ பொம்மைகளை ஞாயிற்றுக்கிழமை எரித்தனா்.

இதைத் தொடா்ந்து, வினாத் தாள் கசிவு உள்பட பிஎஸ்சி தோ்வுகள் முறைகேடு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று ஹேமந்த் சோரன் பதவி விலக வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை ஆக.20-இல் நடத்தவுள்ளதாக அறிவித்தனா்.

நாளை காங்கிரஸ் ஆலோசனை: ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்து வரும் நிலையில், அதை திரும்பப் பெறக்கோரி பல்வேறு மாணவா் அமைப்புகள் அழுத்தம் தந்து வருகின்றன. இந்தச் சூழலில் ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக.18) முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக அந்தக் கட்சியின் ஊடகப் பொறுப்பாளா் ராகேஷ் சின்ஹா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும். ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத் தோ்வுகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.