அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

ஞானேஷ் குமார் உருவ பொம்பை எரிப்பு: பதவி விலகக் கோரி ராஞ்சியில் ஆர்ஜேடி போராட்டம்!

ஞானேஷ் குமார் ராஜிநாமா கோரி ராஞ்சியில் ஆர்ஜேடி போராட்டம்...

RJD stages protest

ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி போராட்டம் - file photo

Published On :

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் அதிருப்தி குறித்த செய்திகள் வெளியான நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி ஆர்ஜேடி கட்சியினர் ராஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அவரது உருவ பொம்மையையும் எரித்தனர்.

ராஞ்சியின் ஆல்பர்ட் எக்கா சௌக்கில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ​​தேர்தல்களில் பாஜகவுக்கு நியாயமற்ற சாதகமான சூழலைத் தேர்தல் ஆணையம் ஏற்படுத்திக் கொடுப்பதாகக் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

பிகார், வங்காளம் மற்றும் பிற மாநிலங்களில் மக்கள் மனநிலை பாஜகவுக்கு எதிராகவே உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தவும், பாஜகவின் வெற்றியை உறுதி செய்யவும் வாக்காளர் பட்டியல்களில் முறைகேடுகளைச் செய்தார். ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஆர்ஜேடி மாநிலத் துணைத் தலைவர் ஷியாம் தாஸ் சிங் குற்றம் சாட்டினார்.

நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி முழு ஆணையத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வந்தபோதிலும், தங்களுக்குத் தெரியாமல் பிறப்பிக்கப்பட்ட முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.